ஆலங்குளம் தாலுகா புதுப்பட்டி, ராம்நகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுவதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே அங்கு சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.