திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் கோட்டத்திற்கு உட்பட்ட 50-வது வார்டு ஹீபர் ரோடு காவிரி தியேட்டர் அருகில் சாலையோரம் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழாய் உடைந்ததையடுத்து அப்பகுதி மக்கள் அதில் துண்டு பைப்பை பொருத்தி தண்ணீர் பிடித்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் சிரமப்படுவதுடன், தண்ணீர் பிடித்த நேரம் போக மற்ற நேரங்களில் வீணாகி வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.