பழனி அடிவாரம் கிரிவீதிகளில் பக்தர்களின் தாகம் தணிக்க கோவில் நிர்வாகம் சார்பில் குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் கடந்த சில நாட்களாக இந்த தொட்டிகளில் முறையாக குடிநீர் நிரப்பாததால் அவை காட்சி பொருளாக மட்டுமே இருந்து வருகிறது. எனவே காலை, மாலையில் பழனி மலையை சுற்றி கிரிவலம் வரும் பக்தர்கள் குடிநீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். எனவே கிரிவிதிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளில் முறையாக குடிநீரை நிரப்ப கோவில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்