பழனி அருகே அ.கலையம்புத்தூர் ஊராட்சி மருகால்காலனியில் அடிபம்பு, குடிநீர் தொட்டி ஆகியவை முட்புதர் மண்டி பயன்படுத்த முடியாமல் கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக சிரமப்பட்டு வருகின்றனர். பொதுமக்களின் சிரமத்தை போக்குவதற்கு குடிநீர் வசதி செய்து தரவேண்டும்.