குழாய் உடைவதால் வீணாகும் குடிநீர்

Update: 2022-07-24 16:52 GMT

சின்னமனூரில், உத்தமபாளையம் செல்லும் சாலையோரத்தில் பதிக்கப்பட்ட குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. இதனால் குடிநீர் வெளியேறி சாலையில் தேங்குகிறது. இதனை தடுக்க வாய்க்கால் போன்று அப்பகுதியை சேர்ந்த சிலர் பள்ளம் தோண்டியுள்ளனர். இந்த பள்ளம் இருப்பது தெரியாமல் இரவில் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே பள்ளத்தை மூடுவதுடன், குழாய் உடைப்புக்கு நிரந்தர தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்