மாரம்பாடி ஆரோக்கிய அன்னை திருத்தலம் அருகில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்து எம்.ஜி.ஆர் நகர், கஸ்தூரி நகர் கல்லறை தோட்டம் மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. ஆனால் இப்போது எம்.ஜி.ஆர் நகர் மக்களுக்கு மட்டும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் கஸ்தூரி நகர் கல்லறை தோட்ட மக்கள் தொலைதூரம் சென்று காவேரி கூட்டுக்குடிநீரை சுமந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே முறையாக குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.