குடிநீர் வழங்க வேண்டும்

Update: 2023-08-09 16:46 GMT

தர்மபுரி நகரை ஒட்டியுள்ள இலக்கியம்பட்டி ஊராட்சியில் ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன. இந்த பகுதிகளில் உள்ள வீடுகளில்வாரத்தில் சில நாட்கள் தண்ணீர் விடப்படுவது வழக்கம். இந்த நிலையில் ஏராளமான குடியிருப்புகள் உள்ள வி.பி.சிங் தெரு உள்ளிட்ட சில பகுதிகளுக்கு கடந்த 15 நாட்களாக குடிநீர் வினியோகம் தடைபட்டுள்ளது. இதனால் இந்த பகுதி குடியிருப்புகளைச் சேர்ந்த பொதுமக்கள் தண்ணீர் கிடைக்காமல் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். ஒரு முறைக்கு ரூ.500 முதல் ரூ.1000 வரை செலவழித்து தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே இந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு மீண்டும் தண்ணீர் வழங்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்