மரக்காணம் ஒன்றியம் காணிமேடு கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. இதில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து வருவதால், குடிநீர் தொட்டி அதன் உறுதித்தன்மையை இழந்து வருகிறது. இதனால் எந்நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்தில் குடிநீர் தொட்டி உள்ளதால், அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே சேதமடைந்த குடிநீர் தொட்டியை இடித்து அப்புறப்படுத்தி விட்டு, புதிய தொட்டி கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?