கடையநல்லூர்- சேர்ந்தமரம் சாலையில் முபாரக் பள்ளிவாசல் முன்பு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் சாலையும் சேதமடைகிறது. எனவே குழாய் உடைப்பை சரி செய்து, சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டுகிறேன்.