பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், மருவத்தூர் கிராமத்தில் ஆஞ்சநேயர் கோவில் தெருவில் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அடிபாம்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அடி பம்பு தற்போது பழுதடைந்து பயனற்று காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் இந்த அடி பாம்பில் இருந்து தண்ணீர் எடுக்க முடியாமல் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் இப்பகுதி மக்களுக்கு போதிய குடிநீர் கிடைக்காமல் அவர்கள் தங்களின் அன்றாட தேவைகளுக்கு குடிநீரை தேடி அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.