சங்கராபுரம் தாலுகா பூட்டை கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் மற்றும் மேட்டுத்தெருவில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் தொட்டிகளுக்கு மணிமுக்தாற்றிலிருந்து குழாய் இணைப்பு அமைக்கப்பட்டு, குடிநீர் ஏற்றப்படுகிறது. இந்த நிலையில், மணிமுக்தாற்றில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு ஏற்றுவதற்காக அமைக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் குடிநீரில் கழிவுநீரும் கலப்பதால், இதை பயன்படுத்தும் அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.