நாமக்கல் - திருச்சி சாலையில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த பாலம் ஏறும் இடத்தில் வலதுபுறமாக ஒரு ஓட்டலுக்கு முன்பு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நீண்ட நாட்களாக குடிநீர் வீணாகி வருகிறது. இந்த தண்ணீர் அங்குள்ள சாலையில் தேங்குவதால் சாலையும் சேதமாகி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.