சாலையில் குளம்போல் தேங்கும் மழைநீர்

Update: 2023-07-26 18:12 GMT
சங்கராபுரம்-பூட்டை சாலையில் உள்ள சார்பதிவாளர் அலுவலகம், பழைய நீதிமன்ற அலுவலகம், செம்பாரம்பட்டு எல்லை ஆகிய இடங்களிலும், திருக்கோவிலூர் சாலையில் ஆற்று பாலம் இறக்கம் மற்றும் பூட்டை மாரியம்மன் கோவில் நுழைவு வாயில் அருகே உள்ளிட்ட பகுதிகளில் முறையான வடிகால் வசதி இல்லாததால் சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதிகளில் முறையான வடிகால் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்