சாயர்புரம்- நடுவைகுறிச்சி மெயின் ரோட்டில் பேரூராட்சி அலுவலகம் அருகில் சாலையோரமாக குடிநீர் குழாய் வால்வு தொட்டியின் கான்கிரீட் மூடி சேதமடைந்து திறந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் நிலைதடுமாறி அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. எனவே குடிநீர் குழாய் வால்வு தொட்டிக்கு புதிய மூடி அமைக்க கேட்டுக் கொள்கிறேன்.