சேதமடைந்த குடிநீர் தொட்டி

Update: 2023-07-23 12:26 GMT

திருவாரூர்-மன்னார்குடி சாலையில் மூளங்குடி பகுதியில் பொதுமக்கள் வசதிக்காக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இந்த குடிநீர் தொட்டி முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் தொட்டியில் இருந்து குடிநீர் வெளியேறி தொட்டியை சுற்றி தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக அந்த பகுதி மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் தொட்டியை சீரமைத்து முறையான குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.


மேலும் செய்திகள்