பயனற்ற குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

Update: 2023-07-23 12:03 GMT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், சித்தளி ஊராட்சி பீல்வாடி கிராமத்தில் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம் அருகில் ஒன்றிய பொதுநிதி 2022-2023-ல் இருந்து ரூ.8 லட்சம் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் நிலையில் திறக்கப்பட்டு சுமார் 5 மாதங்கள் ஆன நிலையில் தற்போது பழுதடைந்து கடந்த 2 மாதங்களாக பயன்பாடு இன்றி காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்காமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பயன்பாடு இன்றி உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்