திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு 14-வது வார்டு தம்புசாமி நகரில் கடந்த ஒரு வருடமாக கழிவுநீர் கால்வாய் உடைந்து சாலையில் தேங்கியுள்ளது. இதற்கு அருகாமையில் குடிநீர் குழாய் செல்வதால் குடிநீருடன், கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால், குழந்தைகள், வயதானோர் அனைவருக்கும் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. பல முறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும எடுக்கவில்லை. கால்வாயை உடனடியாக சீர் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?