மூங்கில்துறைப்பட்டில் உள்ள கள்ளக்குறிச்சி சாலையில் மினிகுடிநீர் தொட்டி அமைந்துள்ளது. இந்த தொட்டி அருகே ராட்சத பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் பிடிக்க வரும் பொதுமக்கள் அதில் தவறி விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் அச்சப்படுகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே விபரீதம் ஏற்படும் முன் ராட்சத பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.