சங்கராபுரம் அருகே பழையனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ளது. இந்த குடிநீர் தொட்டி பலத்த சேதமடைந்து காணப்படுவதோடு, சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து வருகிறது. இதனால் எந்நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் குடிநீர் தொட்டி உள்ளதால், அந்த வழியாக செல்லும் மாணவர்கள் ஒருவித அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. ஆகவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் சேதமடைந்த குடிநீர் தொட்டியை அப்புறப்படுத்தி விட்டு, புதிய தொட்டி கட்டித்தர வேண்டும்.