தாழக்குடியில் இருந்து ஆண்டித்தோப்புக்கு செல்லும் சாலையில் பூலாங்குழி பாலத்தின் அருகில் நாஞ்சில்நாடு புத்தனாறு கால்வாயின் கரைப்பகுதி சேதமடைந்து நீர்கசிவு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் மணல் மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது, கால்வாயில் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் மணல் மூடைகள் அடித்துச் செல்லப்பட்டு கரைப்பகுதியில் உடைப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த கரைப்பகுதியில் பக்கச்சுவர் அமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆர்.எஸ்.ராஜன், வைத்தியநாதபுரம்.