நம்பியூரில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் ரோட்டில் கடத்தூர் கிராமம் உள்ளது. இங்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. இதன் காரணமாக ரோட்டில் குழி ஏற்பட்டுள்ளது. இருசக்கர மற்றும் கனரக வாகன ஓட்டிகள் குழியில் சிக்கி விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. குடிநீர் வீணாவதையும், விபத்தையும் தடுக்கவும் அதிகாரிகள் முன்வர வேண்டும்.