மூலைக்கரைப்பட்டி அருகே கடம்பன்குளம் கிராமத்தின் வடக்கு பகுதியில் இருந்து மூலைக்கரைப்பட்டி செல்லும் சாலையில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. எனவே குழாய் உடைப்பை சரி செய்து, சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.