உத்தமபாளையம் பேரூராட்சி 3-வது வார்டில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்ட பொது குடிநீர் குழாயில் சிலர் பிளாஸ்டிக் டியூப் மூலம் இணைப்பு கொடுத்து தண்ணீரை தங்களின் வீடுகளுக்கே எடுத்துச்சென்றுவிடுகின்றனர். இதனால் மற்றவர்களுக்கு குடிநீர் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்படுகிறது. எனவே தட்டுப்பாடு இன்றி குடிநீர் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.