முட்டம் ஊராட்சிக்குட்பட்ட கடியப்பட்டணம் பகுதியில் 10 முதல் 12 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதுவும் மக்கள் பயன்படுத்த முடியாத வகையில் தண்ணீர் கலங்கிய நிலையில் வருகிறது. இதனை பயன்படுத்துவோருக்கு உடல்நலக்குறைவு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, கடியப்பட்டணம் பகுதியில் சீரான குடிநீரும், சுத்தமான வகையில் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.