வீணாகும் குடிநீர்

Update: 2023-06-28 08:46 GMT

ஈத்தாமொழியில் இருந்து ராஜாக்கமங்கலத்துக்கு செல்லும் மேற்கு கடற்கரை சாலை உள்ளது. இந்த சாலையில் ராஜாக்கமங்கலம் துணை மின்நிலையம் அருகில் சாலையில் பதிக்கப்பட்டுள்ள கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், குடிநீர் சாலையில் வீணாக பாய்ந்து வருகிறது. மேலும், சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, குடிநீர் குழாய் உடைப்பை சீரமைப்பதுடன், சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தையும் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்