நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து நாமக்கல் நகராட்சி பகுதிக்கு குழாய் மூலம் குடிநீர் செல்கிறது. மோகனூர் பேரூராட்சி பகுதியில் உள்ள பழைய தாலுகா அலுவலகம் அருகில் தரைமட்ட குடிநீர் தொட்டி கட்டப்பட்டு உள்ளது. அதன்மேல் உள்ள சிமெண்டு சிலாப்பு உடைந்து திறந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தடுமாறி விழும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த குடிநீர் தொட்டியை புதிய சிமெண்டு சிலாப்பு கொண்டு மூட வேண்டும்.
-சுப்புலட்சுமி, மோகனூர், நாமக்கல்.