சேரன்மாதேவி கிழக்கு ரெயில்வே கேட்டில் இருந்து ரெயில் நிலையத்துக்கு செல்லும் சாலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே குழாய் உடைப்பை சரி செய்து சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.