கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி வி.மாதேப்பள்ளி கூட்ரோட்டில் இருந்து பெரிய சூலாமலை செல்லும் சாலையில் சுமார் 200 மீட்டர் தொலைவில் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு 10-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. கடந்த 5 மாத காலமாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பல்வேறு நோய்களால் அவதியடைகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இப்பகுதிக்கு சுத்தமான குடிநீர் வழங்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.