நாகை மாவட்டம் அகரகொந்தகை ஊராட்சி வாழ்மங்கலம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. காரணம் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் வாரத்துக்கு ஒரு முறை மட்டுமே அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக பொதுமக்கள், மாணவ-மாணவிகள், முதியவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் முறையான ஆய்வு செய்து பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.