ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா சேரந்தை கிராமத்தில் போதிய அளவு குடிநீர் வசதி இல்லை. மேலும் காவிரி கூட்டுக் குடிநீர் 15 நாட்களுக்கு ஒருமுறை வினியோகிக்கப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் இந்த பகுதியில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.