குள்ளஞ்சாவடி அருகே அகரம் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பலத்த சேதமடைந்து இப்ப விழுமோ, எப்ப விழுமோ நிலையில் உள்ளது. இந்த குடிநீர் தொட்டி அருகே குடியிருப்புகள் அதிமாக உள்ளதால், பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே விபரீதம் நிகழும் முன் குடிநீர் தொட்டியை இடித்து அப்புறப்படுத்திவிட்டு, புதிய தொட்டி கட்டித்தர அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.