நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பஸ் நிலைய ரோட்டில் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக தூண்கள் அமைப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சங்ககிரி சாலையில் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறி வீணாக சாலையில் ஓடுகிறது. இதனால் இந்த சாலையில் நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே தாமதமாக நடந்து வரும் மேம்பால பணிகளை விரைந்து முடித்து சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சுரேஷ், நாமக்கல்.