ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தினமும் குடிநீருக்காக பொதுமக்கள் கால்கடுக்க அலைந்து திரிகின்றனர். மேலும் குடிநீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது. பொதுமக்களின் நலன்கருதி மாவட்டம் முழுவதும் காவிரி கூட்டு குடிநீரை சீராக வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.