குடிநீர் குழாய் சீரமைக்கப்படுமா?

Update: 2023-06-11 12:13 GMT

நாகை மாவட்டம் அந்தனைபேட்டை சிவன்தெற்கு வீதியில் சாலையோரத்தில் குடிநீர் குழாய் ஒன்று உள்ளது. இந்த குழாய் சேதமடைந்த நிலையில் இருப்பதால் தண்ணீர் வீணாக வெளியேறி செல்கிறது. அந்த பகுதியில் தேங்கியும் நிற்கிறது. தேங்கி நிற்கும் நீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் வீணாக செல்வதை தடுக்க மேற்கண்ட பகுதியில் உள்ள குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும்.



மேலும் செய்திகள்