நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சி பஸ் நிலையம் எதிரே கொள்ளிடம் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதில் இருந்து குடிநீர் வெளியேறி சாலையோரத்தில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன்காரணமாக அந்த பகுதி சேறும்,சகதியுமாக மாறிவருகிறது. குடிநீர் வெளியேறி வீணாக செல்வதால் அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு முறையாக குடிநீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.