கோத்தகிரி அருகே உள்ள கேத்தரின் நீர்வீழ்ச்சி முக்கிய சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் கேத்தரின் நீர்வீழ்ச்சியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் ஏ.டி.எம். எந்திரம் பழுதடைந்து உள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் குடிநீருக்காக அலைந்து திரிய வேண்டிய நிலை உள்ளது. இதனால் அவர்கள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே குடிநீர் ஏ.டி.எம். பழுதை நீக்கி சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.