பண்ருட்டி நகராட்சி 11-வது வார்டு செட்டிப்பட்டறை காலனியில் உள்ள குடிநீர் தொட்டி பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக வெகுதூரம் நடந்து செல்லும் நிலை உள்ளது. இதனால் வயதானவர்கள், பெண்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே குடிநீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.