தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுனில் காசாங்குளம் உள்ளது. இந்த குளத்தின் மேல்கரையின் சுற்றுச்சுவர் சேதமடைந்து தற்போது உடைந்து விழுந்துவிட்டது. இதனால் மேல்கரை பகுதி சுற்றுச்சுவர் இன்றி காணப்படுகிறது. இதனால் தற்காலிகமாக தற்போது தகரத்தால் சேதமடைந்த பகுதி அடைக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் மேற்கண்ட பகுதியில் உள்ள குறத்தின் சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும்.