தர்மபுரி இலக்கியம்பட்டி வி.பி.சிங் தெரு பகுதியில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் சாலையோரத்தில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழாய் சேதமடைந்து தண்ணீர் குழாயில் இருந்து வெளியேறி கழிவுநீர் கால்வாயில் கலந்து வீணாகி வருகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதியடைகின்றனர். எனவே இந்த குடிநீர் குழாயை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.