திருவெண்ணெய்நல்லூர் தாலுகா தடுத்தாட்கொண்டூர் பகுதியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 15 மினி குடிநீர் தொட்டிகள் அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது 2 தொட்டிகள் மூலம் மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால் கூடுதலாக குடிநீர் தொட்டிகள் அமைத்து தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.