சங்கராபுரம் தாலுகா கொசப்பாடி கிராமத்தில் உள்ள ஏரியை தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் ஏரியில் போதுமான அளவிற்கு தண்ணீர் சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்படுவதோடு, நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயமும் உருவாகி வருகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ஏரியை சரியான முறையில் அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.