விருதுநகர் மாவட்டம் தெற்கு வெங்காநல்லூர் பஞ்சாயத்து தெற்கு பொன்னாகரம் பகுதியில் கடந்த சில நாட்களாக போதுமான அளவு தாமிரபரணி குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதனால் பொதுமக்கள் அவதிப்படுவதுடன் குடிநீர் விலைக்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.