விழுப்புரம் பகுதியில் கோடை வெயில் அனல் காற்றுடன் வாட்டி வதைக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் தாகத்தால் தவித்து வருகிறார்கள். எனவே விழுப்புரம் பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் குடிநீர் பந்தல் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்.