சங்கராபுரம் தாலுகா பூட்டை கிராமத்தில் ஆற்றுமேடு மற்றும் நான்காவது வாய்க்காலில் இருந்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நான்காவது வாய்க்கால் மூலம் வினியோகிக்கப்படும் குடிநீரானது சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே இதை சரிசெய்து, சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கிராம மக்களின் கோரிக்கையாகும்.