மூங்கில்துறைப்பட்டில் உள்ள கள்ளக்குறிச்சி சாலை, தேவி நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அதன் வழியே குடிநீர் வெளியேறி வீணாகியதால், அப்பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வந்தது. இதுகுறித்த செய்தி படத்துடன் தினத்தந்தி புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் உடைந்த குடிநீர் குழாயை சீரமைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். இதில் மகிழ்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் தினத்தந்திக்கும், அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.