வீணாகும் குடிநீர்

Update: 2023-05-14 17:59 GMT

நாமக்கல் மாவட்டம், மோகனூர் அடுத்த ஒருவந்தூர் காவிரி ஆற்றிலிருந்து வளையபட்டி வழியாக பட்டினம், சீராப்பள்ளி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு குழாய் அமைத்து குடிநீர் செல்கிறது. இந்த நிலையில் செவிட்டுரங்கன்பட்டி பிரிவு ரோடு அருகில் உள்ள குடிநீர் குழாய் சேதம் அடைந்து குடிநீர் வீணாக சாலையில் செல்கிறது. எனவே இந்த குடிநீர் குழாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுப்ரமணி, வளையப்பட்டி, நாமக்கல்.

மேலும் செய்திகள்