சங்கராபுரம் தாலுகா பூட்டை கிராமத்தில் ஆற்றுப்பாதை செல்லும் வழியில் அமைக்கப்பட்டுள்ள மினி குடிநீர் தொட்டி சேதமடைந்து காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால், பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் கூறியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே மினிகுடிநீர் தொட்டியை சரிசெய்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுமா?