நாசரேத் ஆசிர்வாதபுரத்தில் தெருகுழாய் ஒன்று உள்ளது. அதன் அடிப்பகுதியில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. தெருகுழாயை சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்து நிற்பதால் அதில் குடத்தை வைத்து தண்ணீர் பிடிக்க பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆகையால் தெருகுழாயில் உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.