திருக்கோவிலூர் தாலுகா தனகனந்தல் ஊராட்சி சிவனார்தாங்கள் குளத்து தெருவில் முறையான வடிகால் வசதி இல்லாததால் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு, கொசுத்தொல்லையும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி வருகிறது. எனவே அப்பகுதியில் முறையான வடிகால் வசதி ஏற்படுத்தி தர அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.