இடையக்கோட்டை ஆதிதிராவிடர் காலனியில் காளியம்மன் கோவில் அருகே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. ஆனால் தற்போது வரை அந்த தொட்டியில் நீர் நிரப்பாமல் காட்சி பொருளாகவே இருக்கிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே மேல்நிலை குடிநீர் தொட்டியை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.